அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ் செல்லும் வாய்ப்பு! ஜனாதிபதியின் வாக்குறுதி
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_97.html
இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று திருகோணமலையில் நடைபெற்ற பல்வேறு வைபவங்களில் கலந்து கொண்டார். மூதூர் பிரதேசத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வாக்குறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது வசதியுள்ள முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ்ஜுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். எனினும் எதிர்காலத்தில் வசதியற்ற இலங்கை முஸ்லிம்களும் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை எனது தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தித்தரும்.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பொருளாதார பலம் சில வருடங்களுக்குள் அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் காரணமாக இன்னும் சில வருடங்கள் கழிந்தால் வசதியற்றவர்கள் என்று யாரும் இலங்கையில் இருக்க மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.