தேர்தல் முடிவு கம்மன்பிலவுக்கு சரியான பதிலைக் கொடுக்கும் - ஹெல உறுமய
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_17.html
ஜாதிக ஹெல உறுமய உதவிச் செயலாளர், மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மீண்டும் அரசுடன் இணைந்துகொண்டதையிட்டு தமக்கு எவ்விதக் கவலையுமில்லையெனவும் அவர் நிம்மதியாகப் போய் தமது அரசியலில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.
உதய கம்மன்பில திறமையான அரசியல்வாதி எனவே அவருக்கு அவருடைய நிலைப்பாட்டை எடுக்கும் உரிமை இருக்கிறது. அதைக்கொண்டு ஹெல உறுமய கவலைப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கம்மன்பிலவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு எதிர்வரும் தேர்தல் முடிவு கம்மன்பிலவுக்கு சரியான பதிலைக் கொடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.