பெற்றோலொயக் கூட்டுத்தாபனத்துக்கு 17 கோடி கடன் என்பது பொய் - சஜின் வாஸ்
http://newsweligama.blogspot.com/2015/01/17.html
Sajin denies owing Rs 170m to CPC; to take legal action
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தான் 17 கோடி ரூபா கொடுக்க வேண்டும் என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்திய பின்னர் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்பது பெற்றோலியக் கூட்டுத்தாபன கொள்கை. அதனால் அம்பலாங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தனக்கு நெருங்கிய ஒருவரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அவ்வாறே பணம் செலுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ள ´பொஸ்பெட் டென்னொலெஜி´ என்ற நிறுவனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் நிலையம் சீல் வைக்கப்பட்டிருந்ததால் எரிபொருள் நிரப்ப முடியாமல் போனதாக சஜின்வாஸ் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த எரிபொருள் நிலையத்தை வேறு நபருக்கு வழங்கவே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதென அவர் கூறினார்.
ஆனால் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்பலாங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த 6ம் திகதி தொடக்கம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - Derana