றக்பி வீரரை கொலை செய்து எரித்த யோஷித்த ராஜபக்ஷ?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_61.html
இலங்கை றக்பி விளையாட்டு வீரரான மொஹமட் வஷிம் தாஜூதீன் என்பவரை யோசித்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோஷித்த ராஜபக்ஷ கடற்படையை சேர்ந்த மேலும் இரண்டு படையினருடன் இணைந்து இந்த கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 5 பார்க் வீதியில் தாஜூதீனை கொலை செய்து அவரது காருக்குள் சடலத்தை போட்டு எரியூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
யோஷித்த ராஜபக்ஷவின் காதலியான யசாரா அபேநாயக்க என்ற யுவதி இந்த பரப்பரப்பான தகவலை வெளியிட்டுள்ளதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
தாஜூதீன் தன்னை காதலிப்பதாக சந்தேகம் கொண்டதால் யோஷித்த ராஜபக்ஷ, அவரை கொலை செய்துள்ளதாகவும் யசாரா குறிப்பிட்டுள்ளார்.
மொஹமட் வாஷிம் தாஜூதீன், யசாராவின் பால்ய நண்பர் எனவும் அப்போது அவர் ஹெவ்லோக் விளையாட்டுச் சங்கத்தின் றக்பி அணியில் விளையாடியதுடன் இலங்கை றக்பி அணியில் உப தலைவராகவும் இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விளையாட்டு வீரரை கொலை செய்து காரில் போட்டு எரித்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணையை மூடிமறைக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு கூறியுள்ளதுடன் சகல தகவல்களையும் அழிக்குமாறும் யோஷித்த ராஜபக்ஷ, உத்தரவிட்டிருந்தார்.
நண்பர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து யோஷித்தவுடனான காதல் தொடர்புகளை துண்டித்து கொண்ட யசாரா பின்னர், ராஜபக்ஷ குடும்பத்தினரின் தலையீட்டுடன் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக தகவல் வெளியிட்டு வருவதால், தான் இலங்கை வந்தால் உயிரச்சுறுத்தலை எதிர்நோக்கலாம் என யசாரா கூறியுள்ளார்.